20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்; துபாயில் பதற்றம்
துபாய்: துபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி கிளர்ச்சிப்படையினரும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், துபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. 20 நிமிட இடைவேளையில் 7 முறை வெடிச்சத்தம் கேட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வெடிச்சம்பவம் குறித்தோ, இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியோ அதிகாரிகள் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தான் இதற்கு காரணம் என்று ஈராக் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல, ஏமனின் தலைநகரான சனாவிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை நாசாவின் போட்டோக்கள் காட்டுவதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Jebali Ali is normal and no attack so far
Everything is normal and as usual
பொய்
Destroy All FundamentalistPower-Usurping Iran Leaders Without Mercy For WorldPeace
டிரம்ப் பதவி முடிவதற்குள் மத்திய கிழக்கு நாடுகள் தரைமட்டம் ஆகிவிடும். ஒரு பைத்தியக்கார மனிதனால் உலகமே படாதபாடு படுகிறது
திருட்டு த்ரவிஷ குடும்ப சொத்து ஊ ஊதானா....
திருட்டு த்ரவிஷ மொத்த அமைச்சர்களின் சொத்துக்கள் கதி என்ன?
Dubai under attack Initial reports claim Yemens Iran backed Houthi movement has targeted the Jebel Ali industrial area in Dubai, UAE. Reports indicate multiple explosions, widespread fires, and large plumes of smoke over the area. The situation is still developing.
இரான் தலைமை ஓர் கேடு கெட்ட இனம். அதை உள்நாட்டு மக்களின் உதவியோடு அரபு நாடுகள் ஒழித்துக் கட்ட வேண்டும்
அமெரிக்காவின் ராணுவ தலங்களே துபையில் இருந்து விரட்டினால் ஈரானின் தாக்குதல் நின்றுவிடும்
இனி யாரும் துபாய்க்கு விரும்பி போகமாட்டாங்க, நிலைமை சரியாகிற வரைக்கும்.
ஐயையோ. துபாய் பாதுகாப்பான இடம் என்று நம்பித்தானே நான் சுருட்டனதை எல்லாம் திரட்டி அங்கே கோடிகளில் முதலீடு செஞ்சிருக்கேன். இப்ப அதுக்கு சங்குதானா.
நல்லபடியா கஷ்டப்பட்டு சம்பாதித்ததே சில நேரங்களில் கையில் நிற்க மாட்டேங்குது, ஊரை அடித்து உலையில் போட்ட பணம்........... ?மேலும்
-
மாநில பூப்பந்து போட்டி பள்ளி மாணவிகள் சாதனை
-
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் ‘ஹர் கர் திரங்கா’ தேசிய கொடி ஏற்றம்
-
ஜனாதிபதி வண்ண விருது சின்னம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
-
விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
-
உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சென்னை நபர் பலி: 3 பேர் படுகாயம்
-
யோகா போட்டி பரிசளிப்பு விழா