அரசு கலை கல்லுாரியில் முதுநிலை சேர்க்கை
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் முதுநிலை சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அசல் சான்றிதழ்களை நாளை கொண்டு வர வேண்டும் என முதல்வர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு :
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், இந்த கல்வியாண்டிற்கான முதுநிலை சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தங்களது இளநிலை மதிப்பெண்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பிற்காக நாளை தவறாமல் கல்லுாரிக்கு நேரில் வர வேண்டும்.
மாணவர்கள் வரும் போது, இளநிலை மதிப்பெண் பட்டியல்கள், பட்டப்படிப்பு, தற்காலிக பட்டய சான்றிதழ், மாற்று சான்றிதழ், இன சான்றிதழ், ஆதார் மற்றும் பிற தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.