ரயில்வே ஸ்டேஷன் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடு-பட்டனர்.

அப்போது அங்குள்ள ஏ.டி.எம்., அருகே, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை கிடந்தது. போலீசார் திறந்து பார்த்தபோது, 6.18 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பையை விட்டுச்சென்றவர் யார் என விசாரிக்கின்றனர்.

Advertisement