மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

மேட்டூர்: கொளத்துார், அண்ணா நகரை சேர்ந்த பெயின்டர் சிவகுமார், 55. இவரது மனைவி இந்திராணி, 50. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். நேற்று சிவகுமார், அதே பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் வீதியில் சங்கர், 42 என்பவர் வீட்டில் பெயின்ட் அடிக்கும் வேலை செய்தார். மாலை, 4:00 மணிக்கு வெளிப்புற சுவரில் பணியில் ஈடுபட்டபோது, வீட்டின் மேற்பகுதி கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின் ஒயரில் சாய்ந்தார்.


அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொளத்துார் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்-றனர்.

Advertisement