ரயிலில் மொபைல் திருடியவருக்கு 'காப்பு'

சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் திருமலை, 24. கடந்த, 3 இரவு, சேலத்தில் இருந்து சென்னைக்கு, எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் பயணித்தார். வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது, அவர் வைத்திருந்த மொபைல் போனை காணவில்லை.

அவர் புகார்படி, ரயில்வே போலீசார் விசாரணையில் அதே ரயிலில் பயணித்த, தஞ்சாவூர் மாவட்டம் சாந்தகாட்டை சேர்ந்த அழகர்சாமி, 43, திருடியது தெரிந்தது. இதை, மொபைல் போன், 'லொகேஷன்' மூலம் கண்-டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement