லாரி மோதி முதியவர் பலி
திண்டிவனம்: லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்தவர் முருகேசன், 75; இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் வெள்ளிமேடு பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து பேரிக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி சென்ற தேனி மாவட்டம், தெங்குவார்பட்டியை சேர்ந்த நாகபாண்டி, 50; என்பவர் ஓட்டிவந்த லாரி மோதியதில் முருகேசன் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement