ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்   

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சவுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜியலட்சுமி,நித்யா, சுகந்தி, சுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் வீரபத்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தயாபரன், மாநில செயலாளர் கொஞ்சிவேல் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

இதில் ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 400 வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடங்களை ஏற்படுத்தி நேரடியாக நியமிப்பதை தவிர்த்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் துறையிலிருந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். சங்க நிர்வாகி அமுதா நன்றி கூறினார்.  

Advertisement