மதுபானம் விற்ற இளைஞர் கைது

அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோடு, பட்டறை பஸ் ஸ்டாப் பகுதியில், மதுபானம் கள்ளச் சந்தையில் விற்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். லோகேஷ், 26, என்பவர், மதுபானம் விற்றது தெரிந்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 27 மது பாட்டில்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement