டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில் செயல்பட்டு வரும், சென்னை ஐ.ஐ.டி.,யால் உருவாக்கப்பட்ட, 'கிளைமேட் டீப் டெக் ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'சொலினாஸ் இன்டெகிரிட்டி', 52 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
ஹீரோ என்டர்பிரைஸ் பார்ட்னர் வென்ச்சர் மற்றும் மேலா வென்ச்சர்ஸ் முன்னிலையில், 'சீரிஸ் ஏ1' நிதியுதவி சுற்றில் திரட்டப்பட்டது.
சொலினாஸ் நிறுவனம், நிலத்தடி நீர் மற்றும் கழிவு நீர் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும், சுத்தம் செய்யவும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கவும் உதவும் ரோபோடிக்ஸ் மற்றும் ஏ.ஐ., அமைப்புகளை உருவாக்குகிறது.
இது, நீர் கசிவு, நீர் மாசுபாடு மற்றும் மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குவதை ஒழிப்பதற்கான தீர்வுகளை வழங்குகிறது.
சொலினாஸ் நிறுவனஇணை நிறுவனர் திவான்ஷு குமார் கூறுகையில், ''புதிய முதலீட்டை பயன்படுத்தி, இந்தியா முழுதும் நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப் படும் '' என்றார்.