துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு

புதுடில்லி:துாய்மை எரிசக்தி தொழில்நுட்பத்தில், நுகர்வோராக மட்டும் இல்லாமல், உற்பத்தி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்று மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ., நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரித்தல், எரிசக்தி சிக்கன தொழில்நுட்பங்களை பின்பற்றுதல், வளங்களை திறமையாக பயன்படுத்துதல் மற்றும் கார்பன் உமிழ்வை குறைத்தல் ஆகியவை தற்போதைய தேவை. உலகளாவிய எரிசக்தி மாற்றத்துக்கு தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நாடாக நம்நாடு உருவாக வேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.

வேகமான பொருளாதார வளர்ச்சியையும், தொழில்துறை திறனையும் அரசு ஒருங்கிணைத்து வருகிறது. மதிப்பு கூட்டும் உள்நாட்டு உற்பத்தி சூழலை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே நோக்கம். இதன் வாயிலாக, வலுவான வினியோக தொடரை உருவாக்க முடியும். துாய்மையான எரிசக்தி மாற்றத்துக்கு ஸ்டீல் துறை முதுகெலும்பாக உள்ளது.

சூரிய மின் பூங்காக்கள், காற்றாலை மின்திட்டங்கள், மின் பரிமாற்ற வலையமைப்புகள், பேட்டரி உற்பத்தி ஆலைகள், துறைமுகங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய முதலீடுகளுக்கும் ஸ்டீல் அடிப்படை தேவையாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


@block_B@ தமிழக பழைய காற்றாலைகள் மாற்றம்

தமிழகத்தில் இயங்கிவரும் பழைய காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்களை மாற்றி, அதிக திறன் கொண்ட புதிய காற்றாலைகளை நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை செயலர் சந்தோஷ் குமார் சாரங்கி கூறுகையில், “தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, பொருளாதார ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஆயுளை நிறைவு செய்த காற்றாலை இயந்திரங்களுக்கு பதிலாக, அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய காற்றாலை இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுடன் சென்னையில் அண்மையில் ஆலோசனை நடத்தியுள்ளனர்” என்றார்.block_B
@block_B@ அதிகரிக்கும் பசுமை மின்சாரம் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறன் 300 ஜிகாவாட்டை தாண்டியுள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் இலக்கை எட்டும் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் 30.58 ஜிகாவாட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகம். பிரதமரின் 'வீடுதோறும் சோலார் மின் திட்டம்' வாயிலாக இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகளில் சூரிய மேற்கூரை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் இந்த் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டு வருகின்றன. -பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர்block_B

Advertisement