பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்

புதுடில்லி: நாட்டில் சர்க்கரை இருப்பு குறைவாக உள்ள நிலையில், பண்டிகை கால தேவை அதிகரித்து வருவதால், நாட்டில் மொத்த சர்க்கரை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களும் விலை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், 100 கிலோ சர்க்கரையின் மொத்த விலை கடந்த ஒரு மாதத்தில் 10.20 சதவீதம் உயர்ந்து 4,716 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட எதிர்வரும் பண்டிகை காலத்தில் இனிப்புகளின் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். இதனால், சர்க்கரை ஆலைகள் கையிருப்பை படிப்படியாக சந்தைக்கு அனுப்பும் போது, மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

@block_B@ சர்க்கரை உற்பத்தி தேவைக்கு குறைவாக இருந்தும் 8 லட்சம் டன் ஏற்றுமதி குறைந்த அளவு கையிருப்பால் சர்க்கரை தட்டுப்பாடு - விலை உயரும் அபாயம்.block_B

Advertisement