ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
புதுடில்லி: இந்தியாவில் ஸ்டீல் பயன்பாடு, கடந்த ஜூலை மாதத்தில் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 'பினிஷ்டு ஸ்டீல்' எனப்படும் பயன்பாட்டுக்கு தயாரான ஸ்டீல் வர்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி தொடர்ந்து அதிகமாகவே உள்ளதாக, மத்திய ஸ்டீல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில், நம் நாட்டின் ஸ்டீல் பயன்பாடு 1.44 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6.5 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவின் ஸ்டீல் பயன்பாடு 1.35 கோடி டன் ஆக இருந்தது.
2025 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 5.19 கோடி டன்னாக இருந்த ஸ்டீல் பயன்பாடு, நடப்பாண்டின் அதே காலத்தில் 7.8 சதவீதம் உயர்ந்து 5.59 கோடி டன்னாக உள்ளது. இது உள்நாட்டு தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதை காட்டுகிறது.
கடந்த ஜூலையில் கச்சா ஸ்டீ ல் உற்பத்தி 1.2 சதவீதம் உயர்ந்து 1.43 கோடி டன்னாக உள்ளது. ஹாட் மெட்டல் உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரித்து 81 லட்சம் டன்னாகவும் , பயன்பாட்டுக்கு தயாரான ஸ்டீல் உற்பத்தி 1.4 சதவீதம் உயர்ந்து 1.37 கோ டி டன்னாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவிக் கப் பட்டுள்ளது.