தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில், தமிழக எம்.பி.,க்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுடனான கலந்தாய்வு கூட்டம், நாளை பிற்பகல் 3:00 மணிக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், முதல்வர் விஜய் தலைமையில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக, தமிழகத்தை சேர்ந்த அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஆக்,2026 - 05:26 Report Abuse
தற்குறி உனக்கு பேர் சொல்ல ஒரு MP இல்லை , அப்புறம் உன் கருத்தை நாங்கள் ஏன் ஏற்கணும் 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
07 ஆக்,2026 - 03:25 Report Abuse
பாவம் இரும்புக்கை கோப்பால் சாரும், பாலிடால் சாரும். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement