ஓட்டல்கள் சங்க கூட்டம்

பழநி:பழநி ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் சங்க கூட்டம் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வரி விதிப்பை குறைக்க வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், குப்பை வரியை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து சங்க துணைத்தலைவராக சரவணபவன் ஓட்டல் நாதன், மக்கள் தொடர்பு அதிகாரிகளாக மயூரா கிருஷ்ணன், ராயல் ரபீக் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர் சேகர்பாபு, பொருளாளர் பெரியசாமி, உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement