விபத்தில் காயமடைந்த கோவில் பூசாரி பலி
பெண்ணாடம்: மொபட்டில் இருந்து தவறி விழுந்த பூசாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் பச்சமுத்து, 54; நெய்வாசல் பூமாலையப்பர் கோவில் பூசாரி. கடந்த 3ம் தேதி காலை தனது மொபட்டில் முருகன்குடியில் இருந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.
கே.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகே நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இறந்தார். அவரது மகன் அஜித் புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்
Advertisement
Advertisement