கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கள்ளக்குறிச்சி: பங்காரம் கிராமத்தில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் ராஜிவ் காந்தி, 40; கூலித் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், மாலை பங்காரம் தனியார் கல்லுாரி எதிரே சென்று கொண்டிருந்த ராஜிவ் காந்தியை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், சரமாரியாக கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராஜிவ் காந்தியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement