மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மணலுார்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சூடாமணி, 76; கடந்த 9 மாதங்களுக்கு முன் மனைவி ஜெயலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்தவர் நேற்று முன்தினம் மதியம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இது குறித்து மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement