மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் ‘போக்சோ’வில் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த, பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 50; இவர், மலைக்கோட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் 9ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ஆசிரியர் சிவப்பிரகாசத்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement