எக்ஸ்போவில் புதிய வரவுகள்...
மல்டி பர்பஸ் டவல்;
தினமலர் எக்ஸ்போ என்றாலே, வீட்டு உபயோக பொருட்கள் ‘ஏ டூ இசட்’ கிடைக்கும். இந்த பொருட்களை பர்ச்சேஸ் செய்ய பெண்கள் குவிந்து வருகின்றனர். இங்கு‘மல்டி பர்பஸ் மேஜிக் டவல்’ புதிய வரவாக இடம் பெற்றுள்ளது. இந்த டவல் மூலம் டைனிங் டேபிள், தலை முடி ஈரம், பிரிட்ஜ், கார்களை துடைக்கலாம். இதேபோன்று உங்கள் வீட்டு குட்டீஸ்களால் சுவர்களில் கிறுக்கப்பட்ட எழுத்துக்களை அழிக்க மேஜிக் ஸ்பான்ஜ் இங்கு கிடைக்கிறது.
தாய்லாந்து ஸ்டேஷனரி
சிறுவர்களுக்கு தேவையான பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் முழுக்க, முழுக்க தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ‘பேப்பர் மாடல் சோப் டிஸ்யூ வைப்’, பள்ளிகளுக்கு குழந்தைகள் எடுத்துச் செல்ல ‘பேப்பர் டிஸ்யூ ரோல்’ உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மூலிகை பவுடர்
நம் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் இயற்கை மூலிகை மற்றும் சிறுதானிய பயிர்களின் கஞ்சி பவுடர் கிடைக்கிறது. கருப்பு உளுந்து, கேழ்வரகு ஆகியவற்றை கஞ்சியாக தயாரிக்க பவுடர் மற்றும் உடல் நலனுக்கான நெல்லிக்காய், வெள்ளை பூசணி உள்ளிட்ட பல்வேறு பவுடர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
-
ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 பெஸ்காம் அதிகாரிகள் கைது
-
கல்லால் அடித்து வாலிபர் கொலை
-
அறிவியல் கழக விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
-
ஏராளமானோரிடம் பண மோசடி: தம்பதி கைது
-
பல கோடி ரூபாய் மோசடி செய்த சிவானந்த் வீட்டில் சோதனை
-
குமாரசாமி - ஐ.பி.எஸ்., சந்திரசேகர் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வி