சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் மிக குறைவு
மும்பை: நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஜூலை மாதத்தில் முந்தைய நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தமடைந்துள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
சேவைகள் துறை வளர்ச்சி குறியீட்டு எண்ணான பி.எம்.ஐ., கடந்த ஜூன் மாதத்தில் 57.40 ஆக இருந்தது. அது, ஜூலை மாதத்தில் 53.30 ஆக சரிந்துள்ளது. இது, கடந்த 53 மாதங்களில் பதிவான மிகக்குறைந்த வளர்ச்சி அளவாகும்.
இருப்பினும், இந்த குறியீடு 50 என்ற புள்ளிக்கு மேலாக இருப்பதால், சேவைத்துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே உள்ளதாகவே கருதப்படும். 
உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் புதிய ஆர்டர்கள் மந்தமடைந்ததே தற்போதைய சரிவுக்கு முக்கிய காரணம். குறிப்பாக, கடுமையான போட்டி, தேவை குறைவு, பலவீனமான சந்தை மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை தள்ளிவைப்பது போன்ற காரணங்களால், சேவைகள் துறை வளர்ச்சி இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்