எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்
புதுடில்லி: மேற்காசிய போரால் எரிபொருள் வினியோகம் பாதிப்படைந்த அனுபவத் தை மனதில் கொண்டு, கச்சா எண்ணெய் மட்டுமின்றி எல்.என்.ஜி., எனும் இயற்கை எரிவாயு மற்றும் எல்.பி.ஜி., கையிருப்பை அதிகரிக்க, 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஹார்முஸ் நீரி ணை பகு தி மூடப்பட்டதால், எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்ட பெரும் தடை, நம்நாட்டின் எரிபொருள் வினியோகத்தில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த அனுபவம் தந்த பாடத்தில், எரிபொருள் சேமிப்பில் அரசு கவனம் செலுத் துகிறது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நாட்டின் எரிபொருள் கையிருப்பு அளவை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள இ த்திட்டத்தின்படி கச்சா எண்ணெய் இரண்டு மாதங்களுக்கும், எல்.என்.ஜி., இரண்டு மாதங்களுக்கும், எல்.பி.ஜி., ஒன்றரை மாதத்துக்கும் போதுமான கையிருப்பை உரு வாக்க திட்டமிட்டுள்ளது.
இதற் காக, எல்.பி.ஜி., மற்றும் இயற்கை எரிவாயு பயனாளிகளிடம் இருந்து சிறப்பு கட்டணம் பெற பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. எல்.பி.ஜி.,வாயிலாக ஆண்டுக்கு 4,376 கோடி ரூபாய் பெறப்படும்.
இதனால், ஒரு வீட்டு எல்.பி.ஜி., சிலிண்டருக்கு 18 ரூபாய் அதிகரிக்கும்.
இயற்கை எரிவாயு வழியாக ஆண்டுக்கு, 9,514 கோடி ரூபாய் பெறப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கச்சா எண்ணெய் கையிருப்பு - சேமிப்பு வசதிகளுக்கு மத்திய அரசே நிதியளிக்கும் என கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 53.30 லட்சம் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும், 65 லட்சம் டன் திறன் கொண்ட புதிய சேமிப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
@block_B@ தற்போதைய அவசர எரிபொருள் கையிருப்பு 10 நாட்கள் தேவையை பூர்த்தி செய்கிறது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் இது 100 நாட்களுக்கு மேல் உள்ளது. தற்போது, எல்.என்.ஜி., - எல்.பி.ஜி.,க்கென தனி கையிருப்பு வசதி இல்லை.block_B
மிக பெரிய வித்தியாசம் நமது மக்கள் தொகை.
countries like Australia Japan have built up reserve storage of oil to be used during emergencies and short supply.India also should follow that practice that will help during difficult times.
இங்கும் 75 நாட்களுக்குத் தேவையான எண்ணெய்யை சேமிக்கும் வசதியுள்ளது. ஆனால் எரிவாயு சேமிப்பு வசதி குறைவாகவே உள்ளது. காரணம் மிகக்குறைந்த வெப்பநிலையில் பெரும் அழுத்தத்தில் சேமிக்க வேண்டியுள்ளது. ஏராளமாக செலவு பிடிக்கும்.மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்