அரசு மருத்துவமனையில் கூட்டமாக திரியும் நாய்களால் மக்கள் அச்சம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்குள் கூட்டமாக நாய்கள் வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர் வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம், புளியங்குடி, கீழத்துாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு உள் நோயாளிகள் பிரிவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக படுக்கை வசதியுடன் இருப்பதால் ஏராளமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் மக்களை பார்த்து நாய்கள் குரைப்பதால் அச்சப்படுகின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
--
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்