உயரதிகாரிகள் மீது லஞ்ச புகார் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு
சென்னை: 'ஒவ்வொரு துறையிலும், அதிகாரிகள், உயரதிகாரிகள் மீது, லஞ்ச புகார்கள் வந்தால், அதை மறைக்காமல், சம்பந்தப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, துறைகளின் தலைவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் பல துறைகளின் பிரிவு அலுவலகங்கள், கோட்ட, மாவட்ட, மண்டல, தலைமை அலுவலகங்களுக்கு, பல்வேறு சேவைகளை பெறுவதற்காக மக்களும், ஒப்பந்த பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களும் வருகின்றனர். அவர்களிடம், பலர் லஞ்சம் பெறுகின்றனர். பல அலுவலகங்களில், ஆரம்ப நிலையில் உள்ள பணியாளர்கள் முதல், அந்த அலுவலகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் வரை, லஞ்ச புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிபாரிசு
அவர்களுக்கு மேல், மாவட்ட, மண்டல, தலைமை அலுவலக அளவில் அதிகாரிகளாக இருப்போர் மீது, பெரும்பாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதற்கு அவர்கள், மாவட்ட அமைச்சர்கள், துறை அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருப்பதுடன், அவர்களின் சிபாரிசால் பதவிகளில் இருப்பதுமே, முக்கிய காரணம். அவர்கள் மீது லஞ்ச புகார்கள் வந்தாலும், சம்பந்தப்பட்ட துறைகளை, நிர்வாகம் செய்யும் உயரதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதில்லை.
லஞ்ச ஒழிப்பு துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது, துறையின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சத்தை ஒழிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புகார் கடிதம்
எனவே, ஒரு துறையில் கடைநிலை பணியாளர்கள் முதல், அந்த துறையை வழிநடத்தும் உயரதிகாரிகள் வரை, யார் லஞ்சம் வாங்கினாலும், நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள், உயரதிகாரிகளாக இருப்போர் மீது, லஞ்ச புகார்கள் வந்தால், அந்த புகார் கடிதங்களை மறைத்து விடாமல், சம்பந்தப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி, விசாரணைக்கு உத்தரவிட்டு, உண்மை இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் ராமநாதபுரம் அருகில் கஞ்சா பிடிப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தவேகா நிர்வாகியை தவிர்த்து மற்ற இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது என்ன நியாயம்?
அதே போல் அமைச்சர், MP, MLA, கவுன்சிலர் மீதும் வழக்கு தொடர அரசாணை வெளியிடுங்கள். அப்போதான் லஞ்சம் ஒழியும். அதுவும் பதவியில் இருக்கும்போதே வழக்கு தொடரனும். இதை செய்ய விஜய்க்கு தில் இருக்கா?
லஞ்சம ஒழிப்புத்துறை ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகளின் மேல் வரும் புகார்களை ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகளோ மற்றும் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் விசாரிக்காமல் மன்புமிகு முதல்வரின் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதிகளால் விசாரணை நடத்தலாம்.
அரசு ஊழியர்களே உங்களை தேடி லஞ்சம் கொண்டுவரும் மக்கள், ஒப்பந்ததாரர்கள், வரி பணத்தை திருடி ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் மனது வைத்தால் கைது செய்து சிறைக்கு அனுப்ப முடியும்.... இதை ஒரு சவாலாக எடுத்து செய்யுங்கள்..... இந்த காட்சியை பார்க்க, படிக்க ஆவலாக இருக்கிறோம். ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதில் கில்லாடி யார்! மக்கள் பிரதிநிதிகளா? அரசு ஊழியர்களா? ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்! நடுவராக யாரைப் போடுவது?????
அமைச்சரகள் மட்டும் லஞ்சம் வாங்கலாம் என்று நினைக்க வாய்ப்புள்ளது. அது சரியா?
தேர்தல் தேதி அறிவிப்பு தொடங்கிய நாள் முதல் ரிசல்ட் தெரிந்து பதவியில் அமரும் வரை இந்த அரசியல்வாதிகள் பம்மி பதுங்கி தாஜா செய்யும் வேலைகளை நம்மால் பார்க்க முடியும்.... ஆட்சி அதிகாரம் கையில் வந்தால் அரசு ஊழியர்களை திட்டி மிரட்டுவது வாடிக்கை.... உயர் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்காமல் வேலை செய்வது இல்லை, இந்த யோக்கியன் தான் உங்களை மாதிரி மகா உத்தமர்களை அரியணையில் அமர வைக்கிறார்கள் அதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.... அரசு ஊழியர்கள் சட்டபடி, நியாயப்படி நடந்து கொண்டால் நம்மால் ஒரு வேலையும் உருப்படியாக நடைபெறாது .... ஏதோ இந்த கைக்கூலி வாங்கிக் கொண்டு கண்டுக்காமல் விட்டதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்கள்....
சிறிய மீன்களை மட்டுமே அர்ரெஸ்ட் பண்ணுகின்றனர். பெரிய திமிங்கலங்களை தப்பவிடுகின்றனர். 90% IAS அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என பல இடங்களில் படிக்கிறோம் பல வீடியோ களில் பேசுகிறார்கள் . அனல் ஒரு IAS அதிகாரியை யும் அர்ரெஸ்ட் பண்ணுவதில்லை . இவர்களை அர்ரெஸ்ட் பண்ணினால்தான் விஜய் சர்க்காரின் லஞ்ச ஒழிப்பு முனைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். முன்னாள் பத்திரப்பதிவு செயலாளரிடம் இருந்து இந்த காரியத்தை தொடங்கலாம் .
ஐ ஏ எஸ் ஐ நெருங்கினால் அவர்கள் அவர்களின் கீழ் உள்ளவர்கள் மேலும் மற்றும் மேல் உள்ளவர்கள் மேலும் பழியினை போட்டு அவர்களை மாட்டிவிட்டு தாம் தப்பித்துக்கொள்ள வழி தேடுவார்கள். ஐ ஏ எஸ் களுக்குள்ள நெட்ஒர்க் ஃபெவிகாலை விட 1000 மடங்கு ஸ்ட்ராங் ஆனது. ஒரு பைல்களிலும் அவர்கள் சில மடாதிபதிகள் மற்றும் முன்னாள் அரசர்கள் போல கையெழுத்து இடமாட்டார்கள் முத்திரை மட்டுமே பதிப்பார்கள் என்று பலர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால் அவர்களின் தந்திரம் இந்த அரசிடம் பலிக்காது போல் தோன்றுகிறது
கடந்த 30 ஆண்டு காலமாக, தமிழக அரசுப் பணிக்கு வந்த பலரும் வரையறை இல்லாமல், லஞ்ச லாவண்ய செயல்களில் ஈடுபட்டு, கோடிகளை வாரிக் குவித்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. இதில் எந்த ஒரு அரசுத் துறையும் விதி விலக்கு என்று கூற முடியாது. ஆனால் இன்று வரை இந்த லஞ்ச லாவண்ய செயல்கள் தொடர்ந்து நடந்தாலும், தவெக அரசின் கெடுபிடி காரணமாக, சற்று அடக்கி வாசிக்கப்படுகிறது என்பதே உண்மை. எனினும் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் லஞ்சம் பெறுவோர் யாராக இருந்தாலும், உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சம் பெறுவோர் மனங்களில் அச்சம் ஏற்படும்.
Awesome