ராமேஸ்வரம் மீனவருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒரு படகையும் அதில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 9 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆக.,22 வரை அவர்களின் சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்தனர். விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்கள் குடும்பத்தினர் இதனால் அதிர்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement