உலக தாய்ப்பால் வார விழா
திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நலப்பிரிவு இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழாவிற்கு, சங்கத் தலைவர் ஐங்கரன் சிவகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் வரவேற்றார். மூத்த உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர்கள் கல்கண்டு சுந்தரம், நிவேதிதா முன்னிலை வகித்தனர்.
தலைமை மருத்துவ அதிகாரி முரளி ஸ்ரீ, டாக்டர்கள் கோதை, கவிதா, பாலமுருகன் ஆகியோர் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்து பேசினார். விழாவில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகங்களை வழங்கினார்.
இதில் மண்டல தலைவர் அன்னை சஞ்சீவி, உறுப்பினர்கள் சுகுமார், கோபிநாத், ஐயப்பன், பாலாஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். லோகநாதன், மாவட்ட தலைவர் கார்த்திக் கருணாகரன் தொகுத்து வழங்கினார். செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்