மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்  திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் காமராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் ஜெயசீலன், கண் மருத்துவர் கோமதி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.

முகாமில், 44 பேருக்கு யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. 18 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் இல்லை என்று சான்று அளிக்கப்பட்டது.

Advertisement