டெக்னிக்கல் அனாலிசிஸ் : டெக்னிக்கல்கள் இன்னும் ஏற்றத்துக்கு சாதகமாகவே உள்ளன

நேற்று 16 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் இல்லாமல் காணப்பட்டது. நாளின் இறுதியில் 11 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டிமிட்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 0.51 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 1.04 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடு இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 1.32 சதவீதம் குறைந்தும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 2.20 சதவீதம் உயர்ந்தும் நிறைவடைந்தன. நிப்டி பார்மா குறியீடு மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,478 நிறுவனங்களின் பங்குகளில் 1,667 ஏற்றத்துடனும்; 1,672 இறக்கத்துடனும்; 139 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன. எல்லா முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,) மேலேயே நிறைவடைந்திருப்பது நிப்டியின் பாசிட்டிவ் டெக்னிக்கல் அமைப்பை உறுதிப்படுத்துகிறது.

ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர் ஓவர் பாட் பகுதியில் இருப்பதால் குறுகிய காலத்தில் லாபத்தை வெளியே எடுக்கும் விற்பனை அல்லது கன்சாலிடேஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., (62.20) இன்னும் ஏற்றத்திற்கு ஆதரவாகவே உள்ளன.
Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News
Tamil News




உடனடி சப்போர்ட் 24,630 மற்றும் 24,500-ல் இருக்கிறது. உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,700 மற்றும் 24,800-ல் இருக்கிறது. 24,600-24,630-லெவலுக்கு மேலே நிப்டி இருக்கும் வரை 24,800-ஐ நோக்கிய ஏற்றம் தொடர்வதற்கான சாத்தியக்கூறு இருக்கவே செய்கிறது.
நிப்டி 24,500க்கு கீழே சென்றால் மட்டுமே இப்போது இருக்கும் ஏற்றத்திற்கான மொமென்டம் குறைய ஆரம்பிக்கிறது என்று கொள்ளலாம்.

Advertisement