நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி
நமது நிருபர்
நாட்டின் முதலாவது எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் அர்ஜூன் அருணாச்சலம், தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து டாடா மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் காப்பாற்றியதாக, நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு உண்டாகும் உடல் பாதிப்புகளை தெள்ளத்தெளிவாக கண்டறிய உதவும் சாதனங்களில் அதிக விலை மதிப்பு கொண்டது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம். இந்த இயந்திரத்தை, முன்னேறிய நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களே தயாரிக்கின்றன. இயந்திரத்தின் விலை, குறைந்தபட்சம் 8 கோடி ரூபாய் முதல் அதிகபட்சம் 15 கோடி ரூபாய் வரை உள்ளது.
நாட்டில் தற்போது, 5 ஆயிரத்துக்கும் குறைவான எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரங்களே பயன்பாட்டில் உள்ளன. அதுவும், பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமே இந்த இயந்திரத்தை வைத்திருக்கின்றன. சிறிய, நடுத்தர மருத்துவமனைகளுக்கு இத்தனை விலை கொடுத்து இந்த இயந்திரத்தை வாங்குவது சாத்தியமில்லை.
இதற்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவை சேர்ந்த பொறியாளர் அர்ஜூன் அருணாச்சலம், புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை தன் வோக்சல்கிரிட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் உருவாக்கினார். மேற்கத்திய எம்.ஆர்.ஐ., சாதனங்களை போல் அல்லாமல், இந்த இயந்திரத்தை குறைந்த செலவில் உருவாக்க முடியும். அதன் மூலம் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கட்டணமும் குறையும்.
இது பற்றிய தகவல்கள் பரவியதும், பன்னாட்டு நிறுவனம் ஒன்று, அர்ஜூன் அருணாச்சலத்தின் நிறுவனத்துடன் கூட்டு சேரவும், முதலீடு செய்யவும் முன் வந்தது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த நிலையிலும், பன்னாட்டு நிறுவனத்தின் முயற்சிக்கு அர்ஜூன் அருணாச்சலம் உடன்படவில்லை.
இதையடுத்து அவருக்கு முதலில் ரத்தன் டாடாவின் டாடா டிரஸ்ட் அமைப்பும், பின்னர் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனமும் நிதியுதவி வழங்கின. இதன் காரணமாகவே, தன் நிறுவனம், பன்னாட்டு நிறுவனத்தின் பிடியில் சிக்குவதில் இருந்து தப்பியது என்று வோக்சல்கிரிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான அர்ஜுன் அருணாச்சலம் தெரிவித்தார்.
தற்போது 47 வயதான மின்னணுப் பொறியாளர் அர்ஜுன் அருணாச்சலம் கூறுகையில், ''நாங்கள் உருவாக்கியுள்ள கருவி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் செலவை 70 சதவீதம் குறைக்கும். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் மேம்பட்ட நோயறிதல் சேவைகளைக் கிடைக்கச் செய்யும்.
எம்.ஆர்.ஐ., கருவிகள், இதுவரை உருவாக்கப்பட்ட மருத்துவ சாதனங்களிலேயே மிகவும் விலை உயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிகத் தேவை கொண்ட சாதனங்களில் ஒன்றாகும். எம்.ஆர்.ஐ ஸ்கேனரை உருவாக்குவது என்பது பெரும்பாலும் ஒரு ஜெட் இன்ஜின் அல்லது ராக்கெட்டை உருவாக்குவதோடு ஒப்பிடப்படுகிறது '' என்றார்.
ஹீலியம் தேவையில்லை
வழக்கமான வெளிநாட்டு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரங்களில் காந்தங்களை குளிர்விக்க திரவ ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. அது விலை உயர்வானது; பற்றாக்குறையானது; வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டியது; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கட்டண உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆனால் அர்ஜூன் அருணாச்சலம் உருவாக்கியுள்ள எம்.ஆர்.ஐ., இயந்திரத்தில் திரவ ஹீலியம் பயன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெளிநாட்டு எம்.ஆர்.ஐ., இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை; பழுதானால் நீக்குவதற்கு பொறியாளர்கள் கிடைப்பதில்லை என்ற பிரச்னைகளும் இருக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் அமையும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
நல்லது. பூச்சி கூடம் நோக்கம் வேறு நல்ல விஷயம் அவர்கள் வந்தால் சரி வராது
நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி. நல்ல செய்தி .வாழ்த்துக்கள் திரு அர்ஜுன் அருணாச்சலம் . ஏழை எளிய மக்களும் குறைந்த செலவில் ஸ்கேன் செய்து கொள்ள பேருதவியாய் இருக்கும் .மருத்துவ உலகில் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் .நோய்களின் தன்மையை மிக துல்லியமாக அறிந்திட இது முக்கிய பங்காற்றும் .
பாராட்டுவோம் இந்த இயந்திரத்தை உருவாக்கியாவருக்கும், உலகறியாமல் இதற்குப் பொருளுதவி செய்த டாடா மற்றும் சோஹோ நிறுவனங்களுக்கும்.
"நல்லதே செய்ய நாடுமொரு மனமிருந்தால் அவர்
வெல்லவும் உதவிடுவார் அவரே வேந்தன் எனப்படுவார்"
வேந்தன் என்றால் இந்திரன் என்றொரு பொருளும் உண்டு
பாராட்டுவோம் இந்த இயந்திரத்தை உருவாக்கியாவருக்கும், உலகறியாமல் இதற்குப் பொருளுதவி செய்த டாடா மற்றும் சோஹோ நிறுவனங்களுக்கும்.
"நல்லதே செய்ய நாடுமொரு மனமிருந்தால் அவர்
வெல்லவும் உதவிடுவார் அவரே வேந்தன் எனப்படுவார்"
வேந்தன் என்றால் இந்திரன் என்றொரு பொருளும் உண்டு
ஏழை எளியவர் மருத்துவம் பார்க்க லக்ஷக்கணக்கில் செலவாகிறது.அதில் இந்த ஸ்கேன், லேப் செலவுகள் மிக அதிகம். திரு அர்ஜுன் அருணாச்சலம் மற்றும் டாடா,சோகோ நிறுவனத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள்.இனியாவது ஸ்கேன் செலவுகள் உண்மையாகவே குறைக்கப்படவேண்டும்.ஏழைஎளியவர்கள் பயனுறவேண்டும்.மேக் இந்தியா பொருட்களுக்கு அரசுகள் 100% சலுகை அளிக்கவேண்டும்.பாரதத்தின் புகழ் பரவ வேண்டும்.
பாராட்டுக்கள் திரு அர்ஜுன் அருணாச்சலத்திற்கும் அவரது உதவி புரிந்த டாடா நிறுவனத்தினருக்கும் சோஹோ நிறுவனர் திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கும். இதன் மூலம் மருத்துவமனைகள் மிக அதிகமாகவுள்ள ஸ்கேன் கட்டணத்தை குறைப்பார்கள் என்று நம்புவோமாக.
அற்புதம், அருமையான கண்டுபிடிப்பு திரு அர்ஜுன் அருணாசலம் அவர்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். இந்த மெசின் பயன்பாட்டுக்கு வரும்போது 70 % குறைந்த கட்டணத்தில் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க முடியும். ஏழை எளியோர் அனைவரும் இனி பயன் அடைவர். இவருக்கு நாட்டின் உயர்ந்த விருது கொடுத்து மத்திய அமைச்சர் கௌரவிக்க வேண்டும். இந்தியன் யாருக்கும் சலைத்தவன் அல்ல என்பதற்கு இவர் மற்றொரு உதாரணம்.
இது ஆரியர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று விமர்சிப்பார்கள்...
வாழ்த்துக்கள்.. உங்கள் சேவை மகத்தானது... உங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்க்கு ஏற்பாடு செய்யுங்கள். அணைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த இயந்திரத்தை நிறுவி மக்கள் சேவையில் பங்குபெருங்கள்.