எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் -
திருப்புவனம், ஆக.8-
திருப்புவனம் வட்டாரத்தில் பாமாயில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய 100 சதவிகித மானியத்தில் கன்றுகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாமாயில் எண்ணெய் தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் பனை கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
ஒரு எக்டேருக்கு 29 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பனங்கன்றுகள் வழங்கப்படுகின்றன. முதல் நான்கு ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு எக்டேரை பராமரிக்க 5 ஆயிரத்து250 ரூபாயும், ஊடு பயிர் சாகுபடி செய்ய 5 ஆயிரத்து 250 ருபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.
மழை நீர் மற்றும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கினாலும் பனை மரம் பாதிக்கப்படாது. முதல் நான்காண்டுகள் வரை ஒரு மரத்திற்கு மூன்று டன் வரை மகசூல் கிடைக்கும் என்றும், ஐந்து ஆண்டு கால மரத்துக்கு12 டன் மகசூல் ,6 ஆண்டு மரத்துக்கு 25 டன் மகசூல் கிடைக்கும். அதிக அளவு மகசூல் காட்டும் விவசாயிகளுக்கு ஒரு டன்னிற்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
தேவைப்படும் விவசாயிகள் திருப்புவனம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும்
-
விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதல்வர் விஜய் மனைவி சங்கீதா : வழக்கு முடித்து வைப்பு
-
விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
-
போதை விழிப்புணர்வு ஊர்வலம்
-
செஞ்சியில் 7 இடங்களில் கருணாநிதி நினைவு நாள்
-
பைனான்சில் முறைகேடு 2 பெண்கள் மீது வழக்கு
-
விழிப்புணர்வு கருத்தரங்கம்