நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி பயிற்சி
திருப்புத்துார்,ஆக.8-
திருப்புத்துார் வட்டாரத்தில் வையகளத்துாரில் வேளாண் துறை சார்பில் நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) பொ.செல்வம் இயற்கை வேளாண்மை, மண்மாதிரி சேகரித்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். உதவி இயக்குனர் எஸ்.என்.செந்தில்நாதன் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள், விதை நேர்த்தி தொழில்நுட்பங்களை விவரித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் நிவேதா தோட்டக்கலை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பதிலளித்தார். சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண் தாஸ் பருவத்தின் போது விவசாயிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள், நெல்லுக்குப்பின் பயறு, சிறுதானிய பயிரிடுவதின் அவசியம் குறித்து விளக்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement