நிழற்குடையை மறைத்து த.வெ.க., பேனர்
சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி பிரிவில் வாலாந்துாரில் நடக்கும் நலத்திட்ட, இணைப்பு விழாவிற்காக செல்லம்பட்டி ஒன்றிய த.வெ.க., சார்பில் நிழற்குடையை மறைத்து 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
அப்பகுதி செந்தில்செல்வம் கூறியதாவது: முறையான அனுமதியின்றி 'பிளக்ஸ்' வைத்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. தினமும் பலர் நரியம்பட்டியிலிருந்து 2 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளதால் நிழற்குடையில் சிறிது நேரம் இளைப்பாறுவர். நிழற்குடை அருகே ஒதுங்க வேறு இடமில்லாததால் மழை, வெயிலில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement