நுண்கலை திருவிழா
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி இளைஞர் நலத்துறை சார்பில் மாணவிகளின் பல்வேறு திறமை களை வெளிப்படுத்தும் விதமாக நுண்கலை திருவிழா நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா வழி நடத்தினர். கல்லுாரி இளைஞர் நலத்துறை மாணவ ஒருங்கிணைப்பாளர் மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார்.
கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் ப்ரீத்தி முன்னிலை வகித்தார். முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். தலைமை யாசிரியை வரலட்சுமி துவக்கி வைத்தார். மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பரதம், பேச்சு, கவிதை எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட நுண் கலை போட்டிகள் நடக்கப்பட்டன.
போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி சரவண கார்த்திகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி கவிதா உமாதேவி உறுப்பினர்கள் செய்தனர்.