ரேஷன்கடை கைவிரல் பதிவுக்காக 8, 9ல் முகாம்

ஈரோடு:தமிழகம் முழுவதிலும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு, கண் கருவிழி சரி பார்ப்பு எனும் 'கே-ஒய்சி' மேற்கொள்ளாத அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளும் கடந்த, 2ல் கைரேகை பதிவு, கண் கருவிழி சரி பார்ப்புக்காக முகாம் நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, 100 சதவீதம் இப்பணியை நிறைவு செய்யும் வகையில் வரும், 8, 9 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அன்றைய தேதியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடக்கும் முகாமில் கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளலாம்.

Advertisement