சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட 34 பேர் கைது

ஈரோடு:ஈரோடு மாவட்ட அளவில் சைபர் கிரைம் குற்றங்களில் நேரடியாக, மறைமுகமாக கடந்த ஓராண்டு காலத்துக்குள் ஈடுபட்ட, 34 பேரை கண்டறிந்து, ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார், நேற்று கைது செய்தனர்.

இவர்கள் மொபைல்போன், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ரா கிராம், மெயில், முகநுால், செயலியை பதிவிறக்கம் செய்யவைத்து மோசடி செய்து பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட்டவர்கள். இதில் சிலர் தங்கள் வேலைக்காக கமிஷன் பெற்றனர். சிலர் நேரடியாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement