மாவட்டத்தில் 2 பள்ளிகளுக்கு தேசிய விருது
ஈரோடு:மத்திய
கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி துறை மற்றும் எழுத்தறிவு துறை
சார்பில் செயல்படும் துாய்மையான மற்றும் பசுமையான பள்ளி மதிப்பீடு
2025-26 திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 1,702 பள்ளிகள் பதிவு
செய்யப்பட்டு மதிப்பீட்டில் பங்கேற்றன.
இதில், 1,403 பள்ளிகள்
நான்கு நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட தர சான்றுகளை பெற்றுள்ளன.
மாவட்ட அளவிலான மதிப்பீட்டில் சிறந்து விளங்கிய எட்டு பள்ளிகள்
மாநில அளவிற்கு பரிந்துரைக்கப்பட்டன. தமிழகத்தில் தேசிய
விருதுக்காக, 20 பள்ளிகள் பரித்துரைக்கப்பட்ட நிலையில் ஒன்பது
பள்ளிகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் இரு
பள்ளிகள் இடம் பெற்று ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளன.
பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, அளுக்கொம்பை-
ஊரக பிரிவு 2 (தேசிய தர வரிசை-16); ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி
எலுார்-ஊரக பிரிவு 1 (தேசிய தரவரிசை 69), என இரு பள்ளிகளும் தேசிய
அளவில் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு லட்சம் ரொக்க
பரிசு வழங்கப்பட உள்ளது.