ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்
நமது சிறப்பு நிருபர்
ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், 114 ரபேல் விமானங்களில் 94-ஐ இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் முன்வந்து உள்ளது.
பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து, ஏற்கனவே, ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படைக்காக மத்திய அரசு வாங்கி உள்ளது. மேலும், நம் கடற்படையும், விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்காக, 'ரபேல் - எம்' ரக விமானங்களை வாங்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
நம் விமானப்படையின் வலிமையை வலுப்படுத்த, பிரான்சிடம் இருந்து கூடுதலாக, 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை அனுப்பி இருந்தது. தற்போது 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான தனது விரிவான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முன்மொழிவை பிரான்ஸ் இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இது, நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் திட்டங்களில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஒப்பந்தம் குறித்து, தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றால் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியத் தொழில்துறையுடன் இணைந்து 94 ஜெட் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த உற்பத்தித் திட்டத்தில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன், முன்னணி பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனங்களான MBDA, சப்ரன் மற்றும் தேல்ஸ் ஆகியவையும் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம், டாடா, லார்சன் & டூப்ரோ மற்றும் பிற உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு கணிசமான வாய்ப்புகளை வழங்குவதோடு, இந்தியாவின் விண்வெளி உற்பத்திச் சூழலமைப்பை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்துறை பங்கேற்பதன் மூலம் ரூ. 1.6 லட்சம் கோடி மதிப்பிலான வணிகம் உருவாகக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஏற்கனவே 62 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளன. இந்த கொள்முதல் நிறைவேறினால், இந்தியாவின் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 176 ஆக உயரும்.
விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து செயல்படும் பணிகளுக்காக மேலும் 31 ரபேல்-எம் ரக போர் விமானங்களைச் சேர்க்கும் தனது விருப்பத்தையும் இந்திய கடற்படை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்திய சேவையில் உள்ள ரபேல் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 200ஐ தாண்டக்கூடும்.
இங்கே ASML பத்தி செய்தி வந்தப்ப ஸ்டிராங்கா ஆப்படிச்சும் இந்த கொத்து அடிமைக்கு புத்தி வரலைன்னா அப்பப்ப அசிங்கப்பட்டே ஆகணும் ....
நேர்ந்து விடப்பட்ட பீஸ்களுக்கு பதில் சொல்ல அப்போல்லாம் பர்மிஷன் இல்லை... இது புரியாத ஏதோ சூரியன் பார்த்து குலைக்குது... ASML இருக்கிற ஊர் என்னோட இரண்டாம் வீடு மாதிரி... கும்மிடிப்பூண்டி தாண்டி போனால் அது என்ன... அங்க என்ன பண்றாங்கன்னு வேகாத பகோடா பீஸ்களுக்கு தான் தெரியும்
ஆஹா இங்கே ups களின் கதறல் அருமை...
நல்லதை பாராட்டுவோம் வரவேற்போம் JAI HIND
சீக்குமூளை கொத்தடிமைகளுக்கு என்ன பிரச்னைன்னா இந்தியா ராணுவ வலிமையில் முன்னணிக்கு வந்துரக்கூடாது .... அப்படியே வந்துட்டாலும் அது மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்துரக்கூடாது .... இன்னொரு நாட்டின் உதவியால் இருந்தாதான் என்ன ? சீன வான்பாதுகாப்பு தயாரிப்பின் தரம் என்ன ? அது பாகிஸ்தானிலும் தோற்றது ... சமீபத்தில் ஈரானிலும் தோற்றது .... ஒரு டெக்னோகிராட் பல்துறை விற்பன்னர் என்றெல்லாம் தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட மா சாண கொத்தடிமையின் சாயம் வெளுக்குது ....
ரபேல் டீலில் ஊழல் ஊழல் என்று கதறிய காங்கிரசால் அதை நிரூபிக்க முடியவில்லை .... பொறுப்பில்லாமல் குற்றச்சாட்டு கூறுவது பிறகு ஆதாரம் கேட்டால் ஓடிவிடுவது என்பதே அக்கட்சியின் அணுகுமுறை ... மாறாக காங்கிரஸ் / UPA ஆட்சியில் தொட்டது அனைத்திலும் ஊழல் .... HAL மட்டுமல்ல ... பல மத்திய அரசு நிறுவனங்களின் ஷேர் ப்ரைஸ் கவனித்தால் தெரியும் .... என்டிஏ அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அவை படிப்படியாக ஏற்றம் பெற்றன ....
During the Congress reign, right from the days of Indira Gandhi, defence procurement meant giving a lot of money to middlemen like Chandraswami, Quattrocchi etc who, in turn, diverted a part of this money to the coffers of the then rulers while keeping some amount for themselves. Prime Minister and Defence Minister and the Family were the prime beneficiaries of purchase of military equipment. Mr Clean Rajiv Gandhi was ambushed by Bofors Howitzers.
Dassault Aviation என்பது பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான நிறுவனம் அல்ல.
இது ஒரு பிரெஞ்சு தனியார் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனம்
யார் சில்லறை என்பது புரிந்து விட்டது பர்கத் என்கிற பார்த்தசாரதி.
அப்போதைய அரசு வெறும் நாற்பதாயிரம் கோடியில் வாங்கி இருக்க வேண்டிய நூற்றிருபது விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அதைவிட பத்து மடங்கு விலையில் பத்தாண்டுகள் கழித்து அதே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் அறிவாளிகள். நம் நாட்டைப்போல அல்லாமல் பிரான்ஸ் அதிகாரிகள் மிக வெளிப்படையாக எவ்வளவு லஞ்சப்பணம் கொடுத்தார்கள் என்பதையும் மிக உண்மையாக சொல்லி விட்டார்கள். நல்லது வெல்லட்டும் அல்லது அழியட்டும் ...
சுள்ளி அறியவும் .... 2016 ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை அல்லது முதல் தகவல் அறிக்கை FIR கோரிய அனைத்து மனுக்களையும் இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முடிவெடுக்கும் செயல்முறையைச் சந்தேகிப்பதற்கோ அல்லது பரவலான ஊழல்/லஞ்சம் நடந்ததாகக் குற்றம் சாட்டுவதற்கோ உறுதியான ஆதாரம் அல்லது சட்டப்பூர்வ அடிப்படை எதுவும் இல்லை என்று அது தீர்ப்பளித்தது. விலை விவரங்கள் மற்றும் ஈடுசெய் கூட்டாளர்களின் தேர்வு ஆகியவை தலையிடுவதற்குக் காரணமல்ல என்று கூறி, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14, 2018 அன்று பொதுநல வழக்குகளின் PILs முதல் கட்டத்தைத் தள்ளுபடி செய்தது. மறுஆய்வு மனுக்கள் மற்றும் புதிய விசாரணைக்கான கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இன்னமும் உளுத்துப்போன குற்றச்சாட்டையே சொல்லிக்கொண்டு இருப்பது மன ஆரோக்கியம் சரியில்லை என்பதன் அறிகுறி ....
சும்மா இந்தியா வல்லரசு மாதிரி டைம் பாஸ் பண்ண இந்த கொளுத்தி போடும் வேலை ?? கோல்மால்புர வாழ்நாள் அடிமைகளாக இருக்கும் தற்குறிஸ் அறியவும் .... நவீன இராணுவ விமானங்களுக்கான உலகளாவிய தரவுத்தளத்தின் WDMMA தரவரிசையின்படி, இந்திய விமானப்படை IAF உலகின் மூன்றாவது வலிமையான தேசிய விமானப்படையாகத் திகழ்கிறது ..... பாஜக மீதான வெறுப்பு நாட்டின் மீதான வெறுப்பு, காழ்புணர்ச்சியாக மாறிவிட்டதன் அறிகுறி இது .....
வாட்ஸ்அப் யூனிவர்சிடில படிச்சிட்டு எதிரா கூட இல்லாமல் நாம் எதிர்பார்த்த மாதிரி எழுதாததவங்க நம்மை மாதிரி கோமூத்ர அடிமையாத்தான் இருக்கனும்னு நம்பும் பீஸ்கள் அடுத்து பெருமை கொள்ள வேண்டிய விஷயம்... இந்தியா நம்பர் ஒன்... ஆமாம் மக்கள் தொகையில்.. இதுக்கும் ஸ்வீட் எடு கொண்டாடு. அடுத்தவன் தயவுல வாழுறத கொண்டாடும் ஈன ஜந்துக்கள் இந்த சங்கிமங்கி பீஸ்கள் மட்டுமே இருக்க முடியும்
இன்னொரு நாட்டிடம் நாம போர்விமானங்கள் வாங்கித்தான் மூன்றாவது வலிமையான விமானப்படையா இருக்கோமாம் .... எம்புட்டு புத்தி கூர்மை இந்த K9 அடிமைக்கு .... வியக்கிறேன் ... அதென்ன ரஃபேல் மட்டும்தானா ?? அதைவிட நவீன, அடுத்தடுத்த தலைமுறை விமானங்களுக்கு நாம் ஏன் தற்போதைய நிலையில் ஏன் முக்கியத்துவம் கொடுக்கல ?? பாவம் ..... இப்படியெல்லாம் யோசிக்க முடிஞ்சா ஏன் கோல்மால்புரத்தில் அடைப்பெடுக்கும் வேலை பார்க்கணும் ?? இதுக்குத்தான் படிச்சுத்தொலை ன்னு ....
NDA ஆட்சியின் கீழ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் HAL ஒரு மந்தமான பொதுத்துறை நிறுவனத்திலிருந்து, அதிக வருவாய் ஈட்டும் மற்றும் லாபகரமான விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை aerospace சார்ந்த முன்னணி நிறுவனமாக உருவெடுத்தது. இந்நிறுவனம் ₹30,000 கோடிக்கும் அதிகமான சாதனை வருவாயை எட்டியதுடன், மதிப்புமிக்க மகாரத்னா Maharatna அந்தஸ்தையும் பெற்றது மற்றும் உள்நாட்டு உற்பத்தித் திறனைப் பெருமளவில் விரிவுபடுத்தியது.
நிதி மற்றும் செயல்பாட்டு வளர்ச்சி: மகாரத்னா அந்தஸ்து - அக்டோபர் 2024-ல் வழங்கப்பட்ட இந்த அந்தஸ்து, HAL-க்கு ₹5,000 கோடி வரையிலான முதலீடுகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நிதிச் சுதந்திரத்தை அளித்தது. சாதனை வருவாய் - 2024–25 நிதியாண்டில் ஆண்டு வருவாய் ₹30,105 கோடியைக் கடந்தது அதேவேளையில் நிகர லாபம் ₹8,300 கோடிக்கும் அதிகமாக இருந்தது. மிகப்பெரிய ஆர்டர் விவரப்பட்டியல் Order Book - LCA தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் பிரச்சந்த் மற்றும் Su-30MKI மேம்பாடுகள் போன்ற முக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்களால், நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு ₹2.7 லட்சம் கோடியைத் தாண்டியது. விரிவுபடுத்தப்பட்ட உற்பத்தித் திறன் - உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போர் விமானங்களுக்கான உற்பத்தி மற்றும் அசெம்பிளி லைன் assembly lines வசதிகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. கொள்கை மற்றும் உத்திசார் மாற்றங்கள்: மேக் இன் இந்தியா Make in India மீதான கவனம் - பாதுகாப்பு அமைச்சகத்தின் இறக்குமதித் தடைப் பட்டியல்கள் negative import lists மற்றும் கட்டாய உள்நாட்டு கொள்முதல் கொள்கைகளால் நிறுவனம் நேரடியாகப் பயனடைந்தது. உள்கட்டமைப்பு விரிவாக்கம் - கர்நாடகாவின் துமகூருவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை உட்பட, புதிய சிறப்பு உற்பத்தி வசதிகள் தொடங்கப்பட்டன. உலகளாவிய மற்றும் சிவில் துறை விரிவாக்கம் - நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டது அத்துடன் சிவில் போக்குவரத்து மற்றும் பயணிகள் விமானத் துறையிலும் எ.கா., ஹிந்துஸ்தான்-228 கவனம் செலுத்தும் வகையில் வணிகப் பரவலாக்கல் உத்திகள் மேற்கொள்ளப்பட்டன.