அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனியாக மலையேற்றப் பயணம் மேற்கொண்ட 2 நாட்களுக்குப் பிறகு, பிஎச்.டி மாணவர் விக்ரம் முபாயி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் பிரிவில் இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயி பிஎச்டி படித்து வந்தார். கலிபோர்னியாவில் உள்ள பிக் பைன் லேக்ஸ் பகுதியில் தனியாக மலையேற்றத்திற்குச் சென்றபோது மாயமானார்.

தேடுதலுக்குப் பின், அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில் குற்றச் செயல் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு குறித்த விசாரணை தொடர்கிறது.
ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த அவர், மலையேறுவதில் ஓரளவு அனுபவம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement