நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடில்லி: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறிப் பொருட்களை வாங்குமாறும், நெசவாளர்களுக்கு ஆதரவான வீடியோக்களை பகிருமாறும் மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நட்பு தினத்தைக் கொண்டாடும் அதே உற்சாகத்துடன், இன்று (ஆகஸ்ட் 07) தேசிய கைத்தறி தினத்தையும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், கைத்தறிப் பொருட்களை வாங்குவதன் மூலமும், சமூக ஊடகங்களில் அவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் நெசவாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கியது. இந்த இயக்கம் நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, தன்னம்பிக்கையின் சின்னமாக மாறியது.
சிறிய வீடுகளில் இருந்து பணியாற்றி, பலவகையான கைத்தறித் துணிகளை உருவாக்கும் நாட்டின் நெசவாளர்களைக் கௌரவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த நிகழ்வு. குறைந்தது ஒரு கைத்தறிப் பொருளையாவது வாங்கி, அதை விளம்பரப்படுத்தும் வீடியோ எடுத்து, மற்றவர்களையும் இத்துறைக்கு ஆதரவளிக்கத் தூண்டும் வகையில் அதை மக்கள் இணையத்தில் பகிர வேண்டும்.
தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும். மக்களின் ஆதரவு, இந்திய நெசவாளர்களின் திறமையையும் கைவினைத்திறனையும் உலகிற்கு வெளிக்காட்ட உதவும். இந்தியாவின் கைத்தறி பொருட்களை பிரபலப்படுத்துவோம். அதை பயன்படுத்த மறக்க கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க...
பிரதமர் மோடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சரியாக சொன்னால் கைத்தறிகள் அதாவது கை நெசவு அரிதாகி விட்டன. எல்லாரும் விசைத்தறி மாறிட்டாங்க கிட்டத்தட்ட. டிசைன் மற்றும் ப்ரிண்டிங் தான் கைவேலையா நடக்குது. இது technology evolution... விளம்பரத்துக்கு அல்லது பந்தாவுக்கு உபயோகிப்பதால் துணிகள் மட்டுமல்ல எந்த கைவினை பொருளும் விலை அதிகம் ஆயிடிச்சு... அந்த கைவினை கலைஞர்கள் பாதுகாப்பு தேவைன்னு வேனா சொல்லலாம்...
ரொம்ப நாளைக்கு அப்றம் உருப்படியா ஒரு கருத்தை போட்ருக்க பாமரா
நாங்க இந்திய மண்ணில் தயாரித்த பொருளைதான் முடிந்தவரை வாங்குகிறோம். மைஸூர் சாண்டில் சோப்பு, காதி துண்டு, பஜாஜ் பைக், ஹிமாலயா பேஸ்ட்,அஜய் டூத்ப்ருஷ்.
நானு கூட டொமஸ்டிக் சோறு கஞ்சி ரொட்டி தான் துன்றேன்... ஆனா பிஸ்ஸா பர்கர் துன்னுட்டு பகோடாஸ் என்னை ஆண்டி இன்டியன்னு திட்றாங்க பாஸு...
பாமரன் வழக்கமா புல்லு கட்டு தானே திங்கும்...பெத்தவங்க சோறு போடலாமே
கைத்தறி, விவசாயம்.. அகண்ட பாரதம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த தேசிய பொருளாதார அச்சாணி. தீப்பெட்டியில் அடைக்க கூடிய அளவு கைத்தறி சேலையை உருவாக்கி சீனா போன்ற விதேசி நாட்டுக்கு அனுப்பிய செய்தி உண்டு. தமிழக கூட்டுறவு சங்க தனி அதிகாரி நியமித்து, திராவிடம் 100 ஆண்டுகள் நடந்த கூட்டுறவு சங்கத்தை 100 மணி நேரத்தில் ஊழலை உருவாக்க முடங்கியது. முதலாளியும், தொழிலாளியும் ஒருவரே உள்ள தொழில் நெசவு. பட்டு போன்று நெசவு தொழிலில் மட்டும் உற்பத்தி செய்யும் நூல் ரகம் நெசவாளர்களுக்கு உதவும். நாடு முழுவதும் கூட்டுறவு சங்கம் வலு பெற வேண்டும்.
நெசவாளர் தின நல்வாழ்த்துக்கள்
போட்டிருக்குற சூட்டு கைத்தறில நெஞ்சது. நம்புங்க.
மோடியின் வழமையான உடை குர்தாவும் பனியன்மாகும், மேலும் அவரது அரைக்கை குர்தா சில சமயங்களில் மோடி குர்தா என்றும் அழைக்கப்படுகிறது. மோடியின் ஆடைகள் பட்டு அல்லது பருத்தியால் ஆனவை, நேர்த்தியாக இஸ்திரி செய்யப்பட்டவை மற்றும் குஜராத்தில் கையால் தயாரிக்கப்பட்டவை. நீங்க அப்பாவிதான் நம்புங்க.
அப்பாவி வீட்ல தண்ட சோறு தான். நம்புங்க
நல்ல கருத்து, நல்ல சிந்தனை. நமது விவசாயிகள் மற்றும் நெசவாளிகள் மிகவும் பயனடைவார்கள். விழாக்காலங்களில் நான் காதியில் துணிகள் வாங்குவேன். நல்ல தரமான துணிகள், சட்டைகள், வேட்டிகள், குர்தா பைஜாமாக்கள் வருகின்றன. அதே போல புடவைகள் அழகழகாக உள்ளன. ஆனால் எடை அதிகம் என்பதால் பெண்கள் விரும்புவதில்லை. நல்ல பருத்தியில் கிடைக்கிறது. நமது நாட்டின் சீதோஷ்ணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் விழாக்காலங்களுக்கு முன்னதாக அனேகமாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. பொதுவான துணிக்கடைகளும் பெரிய கடைகளும் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து வாங்கி விடுகின்றன. அது போல காதியில் போர்வை, ஜமக்காளம், டவல்கள் மிகவும் தரமாக உள்ளன. ஆனால் பாருங்களேன் மோடிஜி சொன்னார் என்பதற்காக நாட்டின் எதிரிகள் என்னமாதிரியெல்லாம் பேசுவார்கள் பாருங்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
நாங்கள் கைத்தறி துணிகளை காலம் காலமாக வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம். But, what is in your wardrobe?
விருமாண்டி உண்மையை சொல்றாப்ளன்னு நம்புவோம்
நக்கல் ஜீ, உங்களுக்கு.மேலும்
-
எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் -
-
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி பயிற்சி
-
நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி
-
செப்.,1 முதல் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்கும் ஏர் இந்தியா
-
வெள்ளிக்குறிச்சியில் 1008 திருவிளக்கு பூஜை
-
மும்பையில் பிரசாந்த் கிஷோர்; தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு