சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
நமது நிருபர்
கால்நடை மருத்துவ பல்கலை வளாகத்தில் 200 சந்தன மரங்களும், 300 தேக்கு மரங்களும் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு உள்ளன.
சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள காட்டப்பாக்கத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
600 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன.
இதில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. வெட்டப்பட்ட சுமார் 200 சந்தன மரங்களும் 300 தேக்கு மரங்களும் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை.
ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் வழக்கமான ஆய்வின்போது காணாமல் போன மரங்களைக் கவனித்தபோது இந்தத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த 20 நாட்களில் நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
வெட்டப்பட்ட மரங்கள் எவ்வாறு யாருக்கும் தெரியாமல் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டன என்பதை கண்டுபிடிக்க பல்கலைக்கழகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் -
-
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி பயிற்சி
-
நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி
-
செப்.,1 முதல் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்கும் ஏர் இந்தியா
-
வெள்ளிக்குறிச்சியில் 1008 திருவிளக்கு பூஜை
-
மும்பையில் பிரசாந்த் கிஷோர்; தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு