சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
புதுடில்லி: ''சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்'' என்று திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்து உள்ளது.
சட்டவிரோதமான மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலியான தகவல்களை சமூக வலைத்தளங்கள் 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திருத்தி கடுமையாக்கியுள்ளது. இதற்கு முன்பு இத்தகைய பதிவுகளை நீக்க 36 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது, தற்போது அது 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிகள், ஆள்மாறாட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் டீப்பேக்குகள், அனுமதியின்றிப் பகிரப்படும் ஆபாச படங்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் ரீதியான வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களுக்கு எதிரான பாதுகாப்புகளை வலுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, பிப்ரவரி 10 அன்று திருத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறினார்.
அனுமதிக்கப்பட்ட ஏஐ வாயிலாக உருவாக்கப்பட்ட வீடியோக்கள், பயனர்கள் அதை என அடையாளம் காணும் வகையில், தெளிவான குறியீடுகளை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சட்டவிரோதமான ஏஐ பதிவுகளை உருவாக்குவது அல்லது பகிர்வதன் சட்டரீதியான விளைவுகள் குறித்தும் தளங்கள் பயனர்களுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரஷ்யாவில் உள்ளது போல் செய்ய வேண்டும். யூட்யூப் பதிவர்கள் தங்கள் பதிவு எண் தெரியும்படி தான் வெளியீடு செய்ய வேண்டும்.நம்ம ஊரிலும் சமூக வலை தளங்களுக்கு பதிவு செய்தல் கட்டாயம் இருக்க வேண்டும்.தவ்று செய்வோரை உடனே பிடிக்க உதவும்.பதிவு எண் இல்லாமல் புதிய கணக்கு தொடங்க அனுமதி கூடாது.எத்தனை சமூக வலை தளங்களாக இருந்தாலும் ஒரே பதிவு எண் என நிர்ணயிக்கலாம்.குறைந்த கட்டணம் வசூலித்து அரசு இதை ஒழுங்குமுறைப் படுத்த வேண்டும்.
பொய் செய்திகளை பரப்பும் சோசியல் மீடியா விற்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அப்போதான் அவர்கள் நேர் வழிக்கு வருவார்கள்.
போலி சோசியல் மீடியா செய்திகள் 3 மணி நேரத்தில் 3 உலகம் சுற்றி விடும். பத்திரிகை பதிப்பு RNI எண். போன்று registrar of social media India அதிகாரி நியமனம் செய்து அவரிடம் சோசியல் மீடியா பதிவு எண் பெற்று வெளியிட வேண்டும். ஒவ்வொரு வெளியீட்டிலும் இந்த எண் கட்டாயம். 10 பக்கம் என்றால், 1/10 முதல் 10/10 வரை வரிசை எண். மத்திய அரசுக்கும், அந்நிய நிறுவனம், வெளியீட்டாளருக்கும் இதில் என்ன கஷ்டம்?