தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார்; சட்டசபையில் முதல்வர் விஜய் உருக்கம்
சென்னை: தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என சட்டசபையில் முதல்வர் விஜய் உருக்கமாக பேசினார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள். மேகதாது விவகாரத்தில் இதுவரை தமிழ்நாடு அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்க வேண்டும்.
பயிர் கடன் தள்ளுபடி செய்ய எவ்வளவு காலம் ஆகும் என அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' இவ்வாறு உதயநிதி பேசினார். உடனே இதற்கு முதல்வர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
அவசியமில்லை
முதல்வர் விஜய் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டு இருக்கிறார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை.
@quote@அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை. quote
மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு. கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்படும் முயற்சிகள் குறித்து 1969ல் இதே அவையில் விவாதம் நடந்து இருக்கிறது.
சட்டப்படி...
அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்பொழுது அணை கட்ட விட்டது யார் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. யாருக்கு பெருமை என்று எல்லாம் பார்க்க கூடாது. இது தமிழக மக்களின் பிரச்னை.
காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் உட்கார்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1969ல் இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அன் பிறகு நிலைமை மாறியது நமக்கு எல்லோருக்கும் தெரியும். சட்டப்படி இந்த பிரச்னையை அணுகுவதில் உறுதியாக இருக்கிறோம்.
அதில் எந்த மாற்றமும் கிடையாது. காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான்; இது பற்றி பல கருத்துக்கள் வந்தன.
பிரச்னையை தீர்க்க பாசிட்டிவான சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் யோசித்தேன். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்.
பேப்பர் படித்தால்…
இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு.
இதுவந்து அரசியலே நாங்கள் தான் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
அமைச்சர் vs எதிர்க்கட்சி தலைவர்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு பதில் அளித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: மூன்று ஆண்டுகளாக முதல்வர் விஜய் யாரையும் பார்த்து பயப்பட்டதில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட என்ன பயம் என கேட்கின்றனர். நாளை தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
உதயநிதி பதில்!
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், ''நான் மேகதாது பற்றி பேசுகிறேன். அனைத்துக்கட்சி கூட்டம், காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை என்று பேசுகிறேன். ஆனால் அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் திசை திருப்ப பார்க்கிறார்'' என்றார். ''ஏங்க.. ஏங்க.. திரும்ப திரும்ப அதே பேசுறீங்க,'' என கூறி மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பேச முயன்ற உதயநிதியை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தடுத்து நிறுத்தினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபையில் முதல்வர் விஜய் vs உதயநிதி காரசார மோதல்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
முதல்வரே முதலில் உங்கள் ஈகோ வை விட்டு தள்ளுங்கள், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு தங்கள் ஒற்றுமையை காட்டி தண்ணீர் தர மாட்டோம் என்கிறார்கள், ஆனால் இங்கு ஏன் அது போல கூட்டம் நடக்கவில்லை ? உங்கள் ஈகோ வால் என்ன ஆச்சு ? ஒரு போகம் சாகுபடி போச்சு, எவ்வளவு நஷ்டம், அந்த விவாசாயிகள் கஷ்டம் தெரியலையா ? நஷ்டம் தெரியலையா ? பயிர் காப்பீடாவது கிடைத்ததா ? ஒன்றும் இல்லை, பிறகு முதல்வருக்கு உருக்கம் ஏன் ?
நீயா? நானா? என்கின்ற போட்டி எப்போதுமே நல்ல முடிவைநோக்கி செல்லாது. தண்ணீருக்காக கடைமடையில் இருக்கும் நாம் முதலமைச்சர் சொல்வதுபோல் சாதுர்யமாக பேசி பலனடைவதுதான் சிறந்தவழி.
திமுகவின் ஊழல் தவிர தமிழகத்துக்கு பெருத்த அவமானம் எதுவும் இல்லை.
த வெ க முதல்வரின் பதிலுரைகள் பூசிமெழுகுவதாக இருக்கிறது. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படாதற்கு சரியான விளக்கம் இல்லை. தொகுதி மறுவரைக்கு ஆலோசனை கூட்டம் தேவையா ? மக்களின் உயிர்நாடி பிரச்னை காவிரி அதில் மெத்தனமாக இருந்துவிட்டு மேதாவி போல் பேசுவது ஏற்புடையதா ? முதலில் தொகுதி மறுவரைக்கு த வெ க வின் நிலைப்பாடு என்ன ? முதல்வரின் இழுப்புக்கெல்லாம் எல்லோரும் வளைந்து கொடுக்க வேண்டுமா ? தனது கட்சியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டவர் தமிழக மக்களுக்காக அவமானத்தை தாங்குவாராம் . கொள்கைகளை பாஜக வின் கால்களில் அர்ப்பணித்தவர் எந்த தெம்பில் பேசுகிறார். தண்ணீர் தேவைக்காக ஒரு குரல் பதிவு கூட செய்யாத ஒருவர் சட்டமன்றத்தில் பழைய பேச்சுக்களை பேசுவது எதற்காக ? takediverson ஒன்றுக்காக மட்டுமே. மக்களும் takediversion எடுத்து ரொம்ப நாளாச்சு .தமிழர்களின் வழிகாட்டி கலைஞரின் கூற்றுப்படி காற்றின் வேகம் குறைகிறது பறப்பது பறவையா அல்லது காகிதமா ? என்று விரைவில் தெரியும்.
நல்ல கேள்விக்கு வாழ்த்துகல்.
தன்னுடைய அறுபது வருட கள்ளத்தனத்தை மறைக்க விஜயை வம்புக்கு இழுக்கும் திமுக. எங்கே சொல்லட்டும் பார்ப்போம், தண்ணீர் தர மறுத்த கர்நாடக முதல்வரை தாக்குவோம் என்று.நாட்டின் பிரதமரை, கவர்னரை சொன்னவர்கள் தானே? சொன்னால் அங்கே இருக்கும் அத்தையார் அனாதையார் ஆகிவிடுவார்.
விஜய் பேச்சு ஒரு முதிர்ச்சியான பேச்சு .. பிரச்சனையை தீர்வு காணும் விதத்தில் அணுகுகிறார்.
இன்றைய காவிரி நதி நீர் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் திமுக என்பதை மக்கள் அறிவர். 1924 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தம், 1974 ல் முடிவுக்கு வரும் முன்பாக, கபினி, ஹேமாவதி ஆகிய காவிரி துணை ஆறுகள் மீது, கர்நாடக அரசு 1969 வாக்கில் தன்னிச்சையாக அணை கட்ட ஆரம்பித்தது. 1971 ல் தமிழகத்தில் இருந்த அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு, கர்நாடக அரசின் அடவாடிப் போக்கை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொடுத்த அழுத்தம் காரணமாக திரும்ப பெறப்பட்டது. வழக்கை திரும்ப பெற்றது தமிழ்நாட்டு திமுக இழைத்த மிகப் பெரும் அநீதி ஆகும். அன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை திரும்ப பெறாமல் இருந்திருந்தால், காவிரி நதி நீர் மீது இவ்வளவு சிக்கல் தமிழ்நாட்டுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கூறலாம்.
Vijay CM dont speak sentiment speech about megadadu. people are not fool. First of all you dont schedule for all party meet the issue of megadadu but you expect all party MP meet on Delimitation issue why your ego is clashing for all party meet in megadadu.
siva don't be smart asking questions after coma stage during DMK and previous ruling ..current CM is new and hope he will get good things...don't keep barking
All party meeting is required only for de-limitation, not for Mekadatu. Vijais approach is correct. Opposition doing politics. Understand the crux of the issues.
Yoga - mind your words what your gave the comments then know how you are? Why not megadadu?
Nanada Kumar - Why not megadadu? Delimilitation they only talking, this session that bill come or not? who knows?
Not in the megadadu because your ego not people welfare ok.
எப்படி இருந்தாலும் நீ தான் தமிழ்நாட்டுக்கு முதல்வர். உனக்கு ஒரு அவமானம் என்றால் தமிழக மக்கள் அனைவருக்கும் அவமானம் தான். இதெல்லாம் உனக்கு புரியுமா. கடவுளே.
மித மிஞ்சிய பயன்பாடு காரணமாக தமிழ்நாட்டின் நிலைத்தடி நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து வருவதாக மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கை. அதில் சென்னை, திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்கள் நிலத்தடி நீரை அதிகம் Over-exploited பயன்படுத்துவதில் சிவப்புப் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....இங்கே 1000 அடி 2000 அடி என்று பாதாளம் வரை சென்று நீர் borewell போட்டு நீர் சுரண்டு கிறார்கள்.... இந்த நீர் மனிதர்கள் குடிக்க ஏற்றதா ??... தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நைட்ரேட் மற்றும் புளோரைடு அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட நீரில் அதிகமாக இருப்பது கண்டறியப்ட்டிருக்கிறது என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்திருக்கிறது.