அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு; நிபந்தனை விதித்த திமுக
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த நிலையில், அதில் பங்கேற்க திமுக நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை; தமிழகத்தின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.
நடைபெற்று வரும் பார்லி கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுகவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை.
தற்போதைய அரசு ஆகஸ்ட் 8ம் தேதி அழைப்பு விடுத்திருக்கும் எம்பிக்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக எம்பிக்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது.
புதுக் கூட்டாளியான காங்கிரசின் மனம் புண்படும் என்பதால் மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது!
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழகத்திற்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாக திமுக இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகதாது அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தவெக அரசு 'டேக் டைவர்ஷன்' அரசியலை மேற்கொள்ள வேண்டாம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு எம்பிகூட இல்ல... இவர் எம்பி...கூட்டம் எப்படி கூட்டுவார்... அவ்வளவு பெரிய ஆளா...? தமிழ்நாடு முதலமைச்சர் ஆயிட்டா... வானளாவிய அதிகாரம் கையில் வந்துடுமா...? தி.மு.க.கட்சி என்ன அவர் சொன்னபடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டு அவர் கட்சியில் இணைந்த விஜய்பாஸ்கரா....? இது ஓவரா தெரியலை... அனைத்துக் கட்சி எம்பி கூட்டம் கூட்டுவது... அதற்கு என்ன தகுதி இருக்கு த.வெ.க.வுக்கு.
What DMK says finally ? Will they attend or not ??? Only DMK has maximum MPs in Lok Shaba . TVK has none in either Lokshaba or Rajyasabha .
Let us stop these dramas and work for the betterment of Tamilnadu
தொகுதி வரையறை க்கு அனைத்து கட்சி கூட்டம் திசையில் தான். இரு பெரும் டைவர்ஸ் கட்சிகள் அங்கே போய் முடியை பிடுங்கட்டும். இது காலத்தின் கட்டாயம் . நிறைவேறியே தீரும்
டேக் டைவெர்சன் - யார் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லை