தடுப்புகள் உடைந்து அவல நிலை அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்
ஊட்டி: ‘ஊட்டி நகர் பகுதியில் நடைபாதைகளில் அமைக்கப்பட்ட தடுப்புகள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்படுவதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து தலையாட்டு மந்து சாலையில், சாலையோரம் நடைப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு சில்வர் தடுப்புகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், தடுப்புகள் பெயர்ந்து சாலையில் தொங்கி கொண்டுள்ளது. இரவு நேரங்களில் சில்வர் தடுப்புகளை சிலர் களவாடி செல்கின்றனர்.
இதேபோல், நகர் பகுதியில் அமைக்கப்பட்ட அனைத்து சில்வர் தடுப்புகளும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த தடுப்புகளை சீரமைத்து பராமரிக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement