விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதல்வர் விஜய் மனைவி சங்கீதா : வழக்கு முடித்து வைப்பு
செங்கல்பட்டு: முதல்வர் விஜயிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அவரது மனைவி சங்கீதா, நேற்று திரும்பப் பெற்றுள்ளார்.
தமிழக முதல்வராக உள்ள விஜய், கடந்த 1999ம் ஆண்டு, தன் ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யாசாஷா என்ற மகளும் உள்ளனர். விஜய், சங்கீதா தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி, சங்கீதா மனு தாக்கல் செய்தார். வழக்கு, கடந்த ஜூன் மாதம் 15ல் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பிரபலங்கள் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இன்று( ஆக.,07) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், வழக்கை வேறு தேதிக்கு தள்ளி வைக்கும்படி, விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், சங்கீதா தரப்பில் இன்றே விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டதால், வழக்கு பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன், சங்கீதா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகி, 15 நிமிடங்களுக்கும் மேலாக விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
இதன் முடிவில், கணவர் விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை, வாபஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைப்பதாக, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால், புதிதாக விவகாரத்து வழக்கு தாக்கல் செய்ய, சங்கீதாவுக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வாசகர் கருத்து (42)
Pandianpillai Pandi - chennai,இந்தியா
07 ஆக்,2026 - 21:23 Report Abuse
என்னபண்றது வாழ்க்கை ஒரு வட்டம் . எல்லாத்துக்கும் பெற்றோர் தான் காரணம். வாலிப வசசுல விஜய் படத்தை டி வி ல கூட பார்க்க விடாம அம்மா தடுத்தது இப்பத்தாங்க புரியுது. ஒரு இடத்தையும் விட்டுவைக்கல. பார்க்கிறதுக்கு கன்றாவியாக இருக்கு. ஒரு நடிகைக்கு விசில் அடிக்க காத்துக்கொடுக்கிற சீன் ரொம்ப மோசமாக இருக்கு. நாக்க கூட விட்டு வைக்கல. ஆத்திரம்தான் வருது. உங்க வேதனைகளை ஆண்டவன் தான் போக்கணும். 0
0
Reply
Natarajan - ,இந்தியா
07 ஆக்,2026 - 21:13 Report Abuse
Not, now. She played politics earlier, and got paid by Udhayanidhi Stalin to file the case. Vijay should divorce her, now and move on with his life with Trisha. "சுட்ட களிமண்ணை ஒட்ட வைக்க முடியாது" 0
0
Reply
Seekayyes - ,
07 ஆக்,2026 - 21:07 Report Abuse
நல்ல முடிவு, வாழ்த்துக்கள். இனி முதல்வர் தன் அரசின் செயல்பாட்டிலன் மீது முழு வீச்சில் கவனம் செலுத்த முடியும். செய்வார். இனி முதல்வர், தன் மனைவி, மகன், மகளுடன் சிறப்பாக பல்லாண்டு இனிய குடும்பமாக வாழ வாழ்த்துகிறேன். 0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
07 ஆக்,2026 - 21:27Report Abuse
இனிமேல்தான் அரசின் செயல்பாட்டில் கவனமா ??....இவர்கள் கையில் ஆட்சியை கொடுத்த பொது மக்களுக்கு யார் வாழ்த்து சொல்வது?? ... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
07 ஆக்,2026 - 21:07 Report Abuse
இதுதான் நாட்டுக்கு ரொம்ப தேவையான அவசியமான முன்னணி செய்தியா ...படித்து முன்னேறிய மாநிலம் ....திருவள்ளுர் செவ்வாய்பேட்டை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக குத்திக் கொலை..தினம் தினம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பாலியல் குற்றம் டாஸ்மாக் போஸ்கொ போதை என்று சீரழியுது .....இது பற்றி சட்ட மன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி யாராவது வாயை திறந்தார்களா?? ... 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
07 ஆக்,2026 - 21:01 Report Abuse
ஜா...ஜெ.... எம்ஜிஆர் எபிசோட் 2.... ஆனால் இவர் எம்ஜிஆர்??? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
07 ஆக்,2026 - 20:49 Report Abuse
குடும்பக்கட்சிக்கு ஷாக் ...... 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
07 ஆக்,2026 - 20:37 Report Abuse
இவர்கள் விவாகரத்து விஷயத்தில் ஒரு சில பிராதான் அரசியல்வாதிகளின் குடும்பத்தார்கள் தலையீடு அதிகமானதினால்தான் சங்கிதா சற்றே தடுமாறினார் இப்போது அவர் முழுதும் புரிந்துகொண்டு விட்டார் யார் அந்நிய தலையிடும் இல்லாமல் இனி அவர்களே சமரசம்கொண்டு நேருக்கு நேர் பேசி தீர்த்துக்கொள்வார்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை எண்ணி அவர்கள் நல்ல முடிவை எடுக்கட்டும் வாழ்வில் இருவரும் ஒன்று சேர்ந்து இறைவன் அருளுடன் சென்றகாலத்தை முற்றிலும் மறந்து புதிய வாழக்கை தொடரட்டும் மக்களின் வாழ்த்துக்கள் 0
0
Reply
SS - ,
07 ஆக்,2026 - 20:30 Report Abuse
வாழ்த்துக்கள். இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 ஆக்,2026 - 20:22 Report Abuse
என்ன காரணத்துக்காக வாபஸ் என்று குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றத்தை விட்டு வெளியில் சமரசம் பேசி முடிவு எடுக்க முடிவெடுத்துவிட்டாரா சங்கீதா? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
07 ஆக்,2026 - 19:44 Report Abuse
அந்த ஜோசியம் தான் காரணம்?. 0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement