செஞ்சியில் 7 இடங்களில் கருணாநிதி நினைவு நாள்
செஞ்சி: செஞ்சி, அப்பம்பட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க., வினர் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி கூட்ரோடு, மாதா கோவில், குளக்கரை, காந்தி பஜார், திருவண்ணாமலை ரோடு, திண்டிவனம் ரோடு, மீன் மார்க்கெட் ஆகிய 7 இடங்களிலும், செஞ்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் அப்பம்பட்டிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அதனையொட்டி, பஸ் நிலையத்தில் இருந்து கூட்ரோடு வரை தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று, கூட்ரோட்டில் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு பிரட், பிஸ்கெட் வழங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக் குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் சங்கர், ஜான் பாஷா, சீனுவாசன், சிவக்குமார், லட்சுமி வெங்கடேசன், பொன்னம்பலம், தொண்டரணி பாஷா, சர்தார், சேகர், ஒன்றிய நிர்வாகிகள் வாசு, ஆறுமுகம், அய்யாதுரை, பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.