பைனான்சில் முறைகேடு 2 பெண்கள் மீது வழக்கு

செஞ்சி: செஞ்சி அருகே பைனான்ஸ் நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக 2 பெணகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் மனைவி சந்தியா, 33; செஞ்சியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் ஆலம்பூண்டியைச் சேர்ந்த நித்திய கல்யாணி, 45; பொன்பத்தியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, 45; ஆகிய இருவரும் கேஷியராக பணிபுரிந்தனர்.

இருவரும் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நிதி நிறுவனத்திற்கு வந்த பணத்தில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக சந்தியா அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் நித்யகல்யாணி, பிரியதர்ஷினி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement