விழிப்புணர்வு கருத்தரங்கம்
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலர் சூசைநாதன் தலைமை வகித்தார். முதல்வர் அருள்ராஜா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஹரிதா, நீத்து ரட்டா ஆகியோர் போதை பொருள்களின் தீமைகள் குறித்தும் அவற்றிலிருந்து விலகி இருப்பதன் அவசியம் குறித்தும் பேசினர். உறுதிமொழி எடுக்கப்பட்டது. வணிகவியல் துறை மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவிகள் தொகுத்து வழங்கினர்.
ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பவிதா மற்றும் கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement