போதை விழிப்புணர்வு ஊர்வலம்

கூடலுார், ஆக. 8

போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தியும், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறியும் கூடலுார் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் வெங்கட்குமார் துவக்கி வைத்தார். போதையை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் பள்ளியில் துவங்கிய ஊர்வலம் எல்.எப்.ரோடு, மெயின் பஜார், காமாட்சி அம்மன் கோயில் தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. ஆசிரியர்கள் உடன் சென்றனர்.

Advertisement