த.வெ.க., அரசின் தனியார்மயம் எனும் பயணம் ஆபத்தானது: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை
சென்னை: 'தமிழக அரசுத் துறைகளில், அனைத்தும் தனியார்மயம் எனும், தமிழக வெற்றிக் கழக அரசின் பயணம் ஆபத்தானது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி எச்சரித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், இளைய தலை முறையின் ஓட்டுகளை பெற்று, அதிகாரத்திற்கு வந்த த.வெ.க., ஆட்சியில், இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கும்; அரசு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அதற்கு முற்றிலும் எதிராக, அரசின் பல்வேறு சேவைகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், மனிதநேயத்துக்கும் எதிரான, த.வெ.க., அரசின் இந்த பயணப் பாதை ஆபத்தானது.
தமிழக அரசின் பட்ஜெட்டில், தனியார் கூட்டாண்மையுடன் செயல்படுத்த, ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது, குதிரைக் கொம்பாகி விடும்.
எனவே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Pay from MegaLoots of your Opportunistic Central Health Ministerமேலும்
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது
-
ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 பெஸ்காம் அதிகாரிகள் கைது
-
கல்லால் அடித்து வாலிபர் கொலை
-
அறிவியல் கழக விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை