டயர் வெடித்து கவிழ்ந்த வேன்

வடமதுரை, ஆக.9-

வடமதுரை அருகே சிமென்ட் துாண், பலகைகளை ஏற்றிச்சென்ற சரக்கு வேனின் டயர் வெடித்ததில் ரோட்டில் கவிழ்ந்தது.

திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதுாரை சேர்ந்தவர் பொன்னர் 35. நேற்று காலை மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு நிலத்திற்கு வேலி அமைக்க சிமென்ட் துாண், பலகைகளை ஏற்றிய சரக்கு வேனை ஓட்டிச்சென்றார்.

வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் சென்ற போது அதிக எடை, டயர் பலவீனம் காரணமாக வேனின் பின்புற டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியனையொட்டி ரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் பொன்னர் காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement